தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி, கேஆர் இன்னோவேஷன் சென்டர், என்இசி பிசினஸ் இன்குபேட்டர் நடத்தும் மூன்று நாள் ஸ்டார்ட்அப் தொழில் முனைவோர் உச்சி மாநாடு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2ஆவது நாளாக ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சுனில் சுக்லா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அளவில் அதிகமான தொழில் முனைவோர்களைத் தமிழ்நாடு தந்து கொண்டிருக்கிறது என்றும் தொழில் முனைவு என்பது வெறும் பணி அல்ல அது ஒரு மனநிலை என்றும் கூறினார். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் என்பவர் உயிர்ப்பான, புதுமையான மற்றும் தெளிவான சிந்தனை உடையவராய் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த மாநாட்டில் புதிய யோசனைகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 700க்கும் மேற்பட்ட நவீன யோசனைகள், 50க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப்கள், 100க்கும் மேற்பட்ட புதுமையான திட்ட ஆலோசனைகள், எக்ஸ்போவில் 70க்கும் மேற்பட்ட முன்மாதிரி காட்சிகள் வைக்கப்பட்டன.
'உலகிலேயே உயர்கல்வி படிப்பவர்கள் தமிழகத்தில் தான் அதிகம்' - அமைச்சர் கே. பி. அன்பழகன்