தூத்துக்குடி: விளாத்திகுளம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதலாபுரம் கிராம ஓடையில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்திலிருந்து குமாரலிங்கபுரம் மற்றும் துரைச்சாமிபுரம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அவசர காலத்திற்கு மருத்துவமனை கொண்டு சொல்லும் நோயாளிகளுக்கும்; ஓடையை கடப்பதற்கு வாகனங்களில் செல்வதற்கும் இரண்டு கிராம மக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே உடனடியாக இணைப்புச்சாலை அமைத்து போக்குவரத்தைச் சரி செய்ய வேண்டும் என்று கூறி, பாலம் அமைக்கும் இடத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சென்னையில் மெட்ரோ பணியின்போது கிரேன் கவிழ்ந்து விபத்து