ETV Bharat / state

சாத்தூர் - தூத்துக்குடிவரை இரட்டை ரயில் பாதை பணி - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு - Tamil news

சாத்தூர் - தூத்துக்குடிவரை நடைபெற்றுவரும் இரட்டை ரயில் பாதை பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார்.

சாத்தூர் - தூத்துக்குடி
சாத்தூர் - தூத்துக்குடி
author img

By

Published : Aug 15, 2021, 8:53 AM IST

தூத்துக்குடி: தென் தமிழ்நாட்டில் அதிவேக ரயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கவும் தென்னக ரயில்வே சார்பில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

ஏற்கனவே மதுரை முதல் திருநெல்வேலிவரை இரட்டை ரயில் பாதை போடப்பட்ட நிலையில், இதற்கு அடுத்தக்கட்டமாக சாத்தூர் முதல் தூத்துக்குடி வரையிலான 88 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.650 கோடி ரூபாய் செலவில் இரட்டை ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இரட்டை ரயில்பாதை
இரட்டை ரயில்பாதை

அதன்படி பணிகள், கடந்த 2018 ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. சாத்தூர் முதல் தூத்துக்குடிவரையான 88 கிலோ மீட்டரில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதி 28 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் எஞ்சியுள்ளன.

தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில் இதுவரை 65 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை ரயில் பாதை பணிகளில் பாதுகாப்பு குறித்து தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை முதல் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை இரட்டை ரயில்பாதை பணிகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தட்டப்பாறை-தூத்துக்குடி வழித்தடத்தில் இன்னும் ஒருசில பணிகள் எஞ்சியுள்ளன. அவை இன்னும் நான்கு தினங்களுக்குள் முழுமை அடையும். அதன் பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஒப்புதல் வழங்கப்படும்.

தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

மதுரை -தூத்துக்குடி வரையிலான இரட்டை ரயில்வே பாதை பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தற்போது கரோனா தொற்று அசாதாரண சூழல் காரணமாக ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னரே ரயில்கள் இயக்கப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: முதல் முறையாக கோட்டையில் கொடியேற்றுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.