ETV Bharat / state

மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு ரூ.2.27 கோடி அபராதம் விதிப்பு என தகவல் - தூத்துக்குடி செய்திகள்

12 Indian fishermen arrested in Maldives: எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு அரசு 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 5:05 PM IST

Updated : Nov 1, 2023, 6:03 PM IST

மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் வெளியிட்ட வீடியோ

தூத்துக்குடி: தருவைக்குளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்.1ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார்(31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர்(22), அதிசய பரலோக திரவியம்(25), மதுரையை சேர்ந்த மாதேஷ் குமார்(15), தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன்(23), ஆதிநாராயணன்(20), மகேஷ்குமார்(24), சிலுவை பட்டி பகுதியை சேர்ந்த அன்பு சூசை மிக்கேல்(48), விக்னேஷ்(31) மற்றும் மணி, சக்தி என மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது, புயலின் காரணமாக கடந்த 20.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியா-மாலத்தீவு இரு நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில், இந்தியா-மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு முன்வந்தது. ஆனால், படகை விடுவிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனை கேட்ட மீனவர்கள் இந்தியா சென்றால் படகுடன் தான் செல்வோம் என்று கூறி வருகின்றனர். மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி ஜெயபாலன் மற்றும் தனியார் ஷிப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோர் ஆகிய இருவரும் மாலத்தீவு நாட்டில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து தனியார் ஷிப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோரிடம் மாலத்தீவில் இருந்து தொலைபேசி வாயிலாக விவரங்களை கேட்ட போது அவர் கூறியதாவது, "மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 லட்சம் ரூபியா, வலை உபயோகித்து மீன் பிடித்ததாக 20 லட்சம் ரூபியா, மேலும், அந்நாட்டு உரிமம் இல்லாமல் அக்கடல் பகுதியில் இருந்ததாக சுமார் 20 லட்சம் ரூபியா (ரூபியா என்பது மாலத்தீவு நாட்டின் பண மதிப்பு) என மொத்தமாக, இந்திய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டினால் படகுகளை விடுவிக்க முடியும்" என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், மீனவர்களுக்கு முழுமையாக இந்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்த அபராதம் இல்லாமல் மீனவர்களையும், படகையும் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கிஷோர் கூறினார்.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான ஆதி நாராயணன் கூறுகையில், "அக்டோபர் 1ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க வந்தோம். அப்போது, இயற்கை சீற்றம் காரணமாக மீன்பிடி வலை மாலத்தீவு எல்லைக்குள் சென்றது. அதன் பின்னர், வலையை இந்திய எல்லைக்குள் கொண்டு வர ஒருநாள் ஆகிய நிலையில், மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். ஆகவே, எங்களையும் படகையும் சீக்கிரம் விடுவிக்க வேண்டும்' என்று இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: "மாலத்தீவோ.. இலங்கையோ மீனவர்களுடன் கலந்து பேசி மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்" - கனிமொழி எம்.பி!

Last Updated : Nov 1, 2023, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.