ETV Bharat / state

'சீர்மிகு நகரம்' கோப்புகள் மாயம்? மாநகராட்சி ஆணையர் விளக்கம்

author img

By

Published : Jul 20, 2019, 6:13 PM IST

தூத்துக்குடி: சீர்மிகு நகரம் திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் விளக்கமளித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி

தூத்துக்குடியில் மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 40 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சீர்மிகு நகரம் திட்டம் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்பு மாநகராட்சி அலுவலகத்திலிருந்து திடீரென மாயமானது.

இது தொடர்பாக இளநிலை உதவியாளர் ஞானசேகரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் விபி ஜெயசீலனிடம் விளக்கம் கேட்கையில், தூத்துக்குடி மாநகராட்சியில் 23 முக்கிய கோப்புகள் காணாமல் போனதாகவும் இது தொடர்பாக மாநகராட்சி இளநிலை உதவியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் வந்த செய்தி தவறானது என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 18 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளை சீர்மிகு நகரம் திட்டத்தில் தேர்வு செய்து சீர்மிகு பள்ளிகளாக நவீனப்படுத்த ரூ.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், அதற்காக பணி ஆணைகள் தயார் செய்யும் நிலையிலிருந்த ஒரு கோப்பு மாயமாகியுள்ளதை குறிப்பிட்டார். மேலும், அந்தக் கோப்பை தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் இணையதளத்தில் உள்ளதாக சொன்ன அவர், ஆகவே அந்த குறிப்பிட்ட கோப்பு காணாமல் போனதால் மாநகராட்சிக்கு இழப்போ, பணிகளுக்கு பாதிப்போ கிடையாது என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம்
மேலும் மாநகராட்சி உதவியாளர் ஞானசேகரன் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்த அவர், தெற்கு மண்டலத்தில் பணியாற்றிவந்த அவர் கிழக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டு ஒரு மாதமாகியும் பொறுப்புகளை ஏற்காத காரணத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். ஞானசேகரன் இருந்த அறைக்கு சீல் வைத்ததாக வந்த செய்திகளும் தவறானது என குறிப்பிட்ட ஜெயசீலன், அங்கு ஒப்புகைச் சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் அறை உள்ளதாகக் கூறினார்.

Intro:தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி கோப்புகள் மாயம் - இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் - மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் விளக்கம்Body:தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி கோப்புகள் மாயம் - இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் - மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் விளக்கம்

தூத்துக்குடி

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 53 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்பு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து திடீரென மாயமானது. இதுதொடர்பாக இளநிலை உதவியாளர் ஞானசேகரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவல் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் மேம்பாட்டு கழக நிறுவனர் வழக்கறிஞருமான அதிசய குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தூத்துக்குடி மாநகராட்சியில் ஊழல் நிறைந்து கிடக்கிறது. மாநகராட்சி ஆணையாளர் முறையாக பணிகளை செய்வதில்லை. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆவணங்கள் மாயமானதற்கு பின்னணியில் பெரும் ஊழல் உள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனை தூத்துக்குடியில் இருந்து வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் மாயமானது தொடர்பாக தனி அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான 23 கோப்புகள் மாயமானதாக பரவிய தகவல் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விபி ஜெயசீலனிடம் விளக்கம் கேட்கையில்,

தூத்துக்குடி மாநகராட்சியில் 23 முக்கிய கோப்புகள் காணாமல் போனதாகவும் இது தொடர்பாக மாநகராட்சி இளநிலை உதவியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் வந்த செய்தி தவறானது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 18 பள்ளிகளில் 5 பள்ளிகளை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தேர்வு செய்து ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றி நவீனப்படுத்த ரூ. 8 கோடி செலவில் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.
அதற்கான பணி ஆணைகள் தயார் செய்யும் நிலையில் இருந்த ஒரு கோப்பு மாயமாகியுள்ளது. அந்த கோப்பை தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளது. ஆகவே அந்த குறிப்பிட்ட கோப்பு காணாமல் போனதால் மாநகராட்சிக்கு இழப்போ, பணிகளுக்கு பாதிப்போ கிடையாது.
மேலும் மாநகராட்சி உதவியாளர் ஞானசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. தெற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த அவர் கிழக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டு 1 மாதமாகியும் பொறுப்புகளை ஏற்காத காரணத்தால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஞானசேகரன் இருந்த அறைக்கு சீல் வைத்ததாக வந்த செய்திகளும் தவறானது. அங்கு இ.வி.எம்.வாக்குப்பதிவு எந்திரம் அறை உள்ளது என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.