ETV Bharat / state

10 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பு -சீதாராம் யெச்சூரி - 10 crore youngsters

தூத்துக்குடி: 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் படித்த 10 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி
author img

By

Published : Apr 10, 2019, 8:36 AM IST

Updated : Apr 10, 2019, 8:10 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் வரும். ஆனால் தேர்தலுக்கு முன் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா, நாட்டில் மதச்சார்பற்ற நிலை பாதுகாக்கப்பட்டதா, அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதா இனி அது தொடருமா என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி
கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய பாஜக ஆட்சியில் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் படித்த 10 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்துவருகின்றனர். ஒரு சில பெரு முதலாளிகளை தவிர அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கோவில்பட்டி தீப்பெட்டி, கடலைமிட்டாய்க்கு பெயர் பெற்றது. மோடி அரசின் ஜி.எஸ்.டி.க்கு பின் கடலைமிட்டாய், தீப்பெட்டிக்கு கூடுதல் மடங்கு வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கூட்டாளியாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். இந்தக் கொள்ளை கூட்டணியினர் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். எனவே மத்தியில் நல்ல ஆட்சி அமைவதற்கு பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் வரும். ஆனால் தேர்தலுக்கு முன் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா, நாட்டில்
மதசார்பற்ற நிலை பாதுகாக்கப்பட்டதா, அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமைகள் பாதுகாக்க பட்டதா இனி அது தொடருமா என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக ஆட்சியில் நாடு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆயிரக்கணக்கான
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் படித்த 10 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.

ஒரு சில பெரு முதலாளிகளை தவிர அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி தீப்பெட்டி, கடலைமிட்டாய்க்கு பெயர் பெற்றது. மோடி அரசின் ஜி.எஸ்.டி.க்கு பின் கடலைமிட்டாய்க்கு, தீபெட்டிக்கு கூடுதல் மடங்கு வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான பேர் வேலையிழந்து வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு  இரு விதமான இந்தியா உருவாக்கி வைத்துள்ளது.

ஒன்று பெரு முதலாளிகளுக்கு. மற்றொன்று பரம ஏழைகளுக்கானது. நம் நாட்டின்  73% செல்வம் இன்றைக்கு ஒரே ஒரு சதவீதத்தை கொண்ட பெரும் பணக்காரர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அதுபோல்
13 லட்சம் கோடி ரூபாய்  பெருமுதலாளிகளுக்கு கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று பாஜகவினர் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த 5 ஆண்டில் பாஜக நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்று எதுவும் இல்லை. அதற்கு பதிலாக ஏற்கனவே கொடுத்த   வாக்குறுதிகளை புதிதாக தந்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு ஒன்னரை  மடங்கு கூடுதல் ஆதார விலை தருவதாக கூறினார். அவர்களின் கடன் தள்ளுபடி  என எதுவும் செய்யவில்லை. 5 ஆண்டு காலமாக நாட்டின் வளத்தை கொள்ளையடித்து விட்டு இப்போது பழைய வாக்குறுதிகளையே
மீண்டும் செய்து தருவதாக மோடி கூறுகிறார். மக்களின் நலனுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.
நாட்டை கொள்ளை அடிப்பவர்கள் என்றும் தனியாக செயல்படுவதில்லை. அதுபோல் பிரதமர் மோடிக்கு கூட்டாளியாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். இந்த கொள்ளை கூட்டணியினர்  மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். எனவே மத்தியில் நல்ல ஆட்சி அமைவதற்கு பாஜக அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். ஆகவே இந்த தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் செய்ய மக்கள் 2 பொறுப்பை ஏற்று செய்ய வேண்டும்.

நாடு வகுப்புவாத அடிப்படையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பசு வதை, சிறுபான்மையினர், தலித்துகள் தாக்கப்பட்டனர்.
எனவே மத சார்பற்ற நிலையை காக்க இந்த ஆட்சி அகற்ற பட வேண்டும். நீதி துறை சிதைக்கப்படுள்ளது. இந்திய ரிசரவ் வங்கி வைப்பு தொகை கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு துறை உள்பட நாட்டின்
அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி உள்ள எல்லா அமைப்புகளும் தாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக வெற்றி பெற முடியாத அவர்கள் தேர்தல் என்றதும் மக்களின்
உணர்வுகளை தட்டி எழுப்புகிற பிரச்சனையை பற்றி பேசுகிறார்கள்.
பதான் கோட் விமான படை தாக்குதல், புள்வாமா தாக்குதல் என கடந்த 5 ஆண்டுகளில்
தீவிரவாத தாக்குதல்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏராளமான படை வீரர்களும், பொதுமக்களும் இறந்துள்ளனர்.
இராணுவ வீரர்களின் இறப்புக்கும், பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பேற்று பதில் சொல்வதற்கு பதிலாக மோடி தன்னை காவலாளி என பெருமை படுத்தி கொள்கிறார்.

விண்வெளி துறையில் விஞ்ஞானிகள் செய்த சாதனையை கூறி மோடியால் மட்டுமே நாட்டை பாதுக்காக்க முடியும் என்று கூறி கொள்கிறார்.
அவர் சொல்லும் ஒன்றை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மோடி காவலாளியாக இருந்தால் அவர்
வானத்திலேயே காவலாளியாக இருந்து கொள்ளட்டும். அப்போது தான் நாமும், இந்த நாடும் பாதுகாக்க இருக்கமுடியும் என கூறினார்.

Last Updated : Apr 10, 2019, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.