ETV Bharat / state

ஆண்டிற்கு ஒரு திருமணம் - பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் சிங்கப்பூர் போலீஸ்! - Singapore police

சிங்கப்பூரில் காவல் துறை அலுவலராகப் பணிபுரிபவர், ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு வரும்போதும் ஒவ்வொரு பெண்ணை திருமணம் செய்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் சிங்கப்பூர் போலீஸ்

author img

By

Published : Jun 13, 2022, 7:27 PM IST

தூத்துக்குடி: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், முகமது ரஃபீக். இவர் சிங்கப்பூர் காவல் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கூத்தாநல்லூரை அடுத்துள்ள அத்திக்கடை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவகாரத்து செய்தார். பின்னர், அவர் தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரது மூன்றாவது பெண்ணை 2020ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.

இதற்காக பெண் வீட்டாரிடம் இருந்து 101 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரம் உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக பெற்றுக்கொண்ட முகமது ரஃபீக் பின்னர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மனைவியை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பிய முகமது ரஃபீக், தனது மூன்றாவது திருமண அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் சிங்கப்பூர் போலீஸ்

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் பகுதியிலுள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் பெண் வீட்டாரிடம் மிடுக்கான காவல் துறையில் அதுவும் வெளிநாட்டு காவல் துறையில் உயர் அலுவலராகப் பணிபுரிவதாக, அடுத்த டார்கெட்டை தொடங்க ஆரம்பித்துள்ளார்.

இதனையறிந்த பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ரஃபீக் மீது புகார் மனு அளித்துள்ளனர். அதில், ஆண்டிற்கு ஒரு மனைவி என தனது வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, அதன் பின்பு பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசை பொருள்களை அபகரித்துகொள்வதற்காக பெண்ணின் நடத்தையில் ரஃபீக் பழி போடுகிறார்.

இனி, எந்தவொரு பெண்ணும் ஏமாந்து விடக்கூடாது. மீண்டும் மீண்டும் இதுபோல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகளை கொள்ளையடிக்கும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: CCTV:வறுத்த கறியில் மசாலா இல்லை... கடை உரிமையாளரை தாக்கிய கும்பல்...- போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.