ETV Bharat / state

உயர் அலுவலரின் பாலியல் தொந்தரவு - ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பெண் பணியாளர் தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Oct 11, 2021, 10:47 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அலுவலரின் பாலியல் தொந்தரவால் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பெண் பணியாளர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sexual harassment of a high ranking official and Panchayat Union office worker attempting to set fire

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் வட்டத்திற்குட்பட்ட பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி, ராமலட்சுமி (வயது 37). ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தற்காலிகப் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று(அக்.11) பிற்பகலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் வாகனத்திற்கு அருகே திடீரென டீசலை, தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட காவல் துறையினர் விரைந்து வந்து ராமலட்சுமியின் மீது நீர் ஊற்றி, அவர் தற்கொலைக்கு முயல்வதை தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அலுவலக அரசியல் தந்த அழுத்தம்

இதுகுறித்து ராமலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தற்காலிகப் பணி செய்து வருகிறேன். நான், பணியில் சேர்ந்த நாள் முதலே வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுநர் கனகராஜ் என்பவர் என்னிடம் தகராறு செய்து வந்தார்.

என்னை வேலையை நீக்குவதற்குப் பல்வேறு சதிகளை செய்து, எனக்கு தொந்தரவு கொடுத்தார். மேலும் உயர் அலுவலர்கள் மூலம் எனக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கி, இரவு 9 மணி வரை வேலை வாங்கினார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தான் என்பவரும் உடந்தையாக செயல்பட்டார்.

ஏடிஎம்-ஐ வைத்து செய்த சதி

மேலும் அரசின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்கள் முறைகேடாக, எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி என்னை மிரட்டி, எனது ஏ.டி.எம். அட்டை மூலமாக அந்தப் பணத்தை எடுத்துச் செலவு செய்து வந்தனர். தற்பொழுது என்னை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக, நான் அரசு பணத்தை மோசடி செய்தது போல என் மீது வீண்பழி போடுகின்றனர்.

பாலியல் தொந்தரவு

இதை எதிர்த்துக் கேட்டதற்கு, நிலைமையை சரிசெய்ய என்னை மிரட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தானும், அவரின் ஓட்டுநர் கனகராஜூம் உல்லாசத்திற்கு வரவேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.

இதற்கு நான் உடன்பட மறுத்ததால் என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இரண்டு குழந்தைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும், எனக்கு இந்த வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. என் மீது விழுந்துள்ள பழியை நீக்குவதற்கும் வழிதெரியாமல் தான் இன்று தீக்குளிக்க முயன்றேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: ரூ.1 கோடி மதிப்புள்ள நிலங்களைப் பொது ஊருணிக்குத் தானமாக கொடுத்த குடும்பங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.