ETV Bharat / state

தேர்வு பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

தூத்துக்குடி: தேர்வு பயம் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

exam fear student suicide
exam fear student suicide
author img

By

Published : Feb 19, 2020, 9:23 AM IST

தூத்துக்குடி திரேஸ்புரம், சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பீச் ரோட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், மாணவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் புன்னக்காயலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்துவந்தார்.

இதனிடையே, அந்த மாணவர் நேற்று (பிப். 18) பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுபற்றி அவரது அண்ணன் ரமேஷ் கேட்டபோது, பொதுத்தேர்வு குறித்து பயம் உள்ளதாக கூறினார். பின்னர், தம்பிக்கு ஆறுதல் கூறிய ரமேஷ், வேலைக்குச் சென்றுவிட்டார்.

அதன்பின், மதியம் சாப்பிடுவதற்காக ரமேஷ் வீட்டுக்கு வந்தபோது மின்விசிறியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அதிவேகமாக பாலத்தில் பயணித்து கீழே விழுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.