ETV Bharat / state

'அதிமுகவின் 3ஆவது தலைமுறையே' - சசிகலா ஆதரவு சுவரொட்டிகளால் பரபரப்பு - admk

ஆகஸ்ட் 18இல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா ஆதரவு சுவரொட்டி
சசிகலா ஆதரவு சுவரொட்டி
author img

By

Published : Aug 16, 2021, 6:58 AM IST

தூத்துக்குடி: கடந்த சில நாள்களாகவே தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக சசிகலா பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவந்தன. அதனால் அரசியலில் அவர் ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

இந்த நிலையில் கோவில்பட்டியில் 'அதிமுகவின் மூன்றாவது தலைமுறையே' என்ற வாசகம் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 18இல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரூபம் வேலவன், தலைமைக் கழகப் பேச்சாளர் ராமசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன் உள்ளிட்டோர் சார்பில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், "தியாகம் வெல்லும். சின்னம்மா தலைமையில் கழகம் செல்லும். திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயமே. அதிமுகவின் மூன்றாவது தலைமுறையே" என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் தொடர நான் முக்கிய காரணம் - எஸ்.பி. வேலுமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.