ஓட்டபிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது, இரண்டாண்டு காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுவருகிறார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதவி மீது மோகம் உள்ளது.
ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார். ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என நினைக்கிறார். அதனை தொடர்ந்து உதயநிதியும் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார். ஆட்சியை கவிழ்க்கவேண்டும் என்ற எண்ணம் உள்ள எவரும் நல்ல தலைவனாக இருக்கமுடியாது
தேர்தலுக்கு பின்னர் ஸ்டாலின் அழப்போகிறார். மக்களாகிய நாம் எல்லாம் சிரிக்கப்போகிறோம். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்றார்..