தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் பாண்டியன், ஆட்சியர் அலுவலக தணிக்கைக் குழு அலுவலர் கருப்பசாமி உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊழியர்களின் அறைகள், உடமைகள், ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் மூன்று லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் ஆறு மணிநேரத்திற்கு மேலாக தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: திருவாரூர் முருகன் கொள்ளை கும்பலின் தலைவனா?