தூத்துக்குடி மாவட்டத்தில் 'பிரிகேடியர்' எனப் பெயர் சூட்டப்பட்டட 16 புதிய இருசக்கர வாகன ரோந்து (Bike Patrol) திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்டக் காவல் துறை அலுவலக மைதானத்தில் வைத்து தொடங்கிவைத்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் ரோந்துப் பணிக்கு இந்த இருசக்கர வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்துவின் இறுதிச் சடங்கின்போது, அவரது உடல் மீது அரிவாள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். அதனால் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், மாவட்டத்தில் மூன்று தனிப்படைகள் மூலமாக நாட்டு வெடிகுண்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் அது எங்கு பதுக்கிவைக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது என்றார்.
இதையும் படிங்க...நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை!