ETV Bharat / state

மின்கசிவால் தனியார் ஹோட்டலில் தீ விபத்து - alwin hotel fire thoothukudi

தூத்துக்குடி: தனியார் ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

fire
author img

By

Published : Nov 23, 2019, 7:39 AM IST

தூத்துக்குடி விஇ ரோட்டில் தனியார் ஹோட்டல் இயங்கி வருகிறது. நேற்று இரவு (நவ.22) 7.30 மணியளவில் ஹோட்டலின் கீழ்தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஹோட்டல் மேல்தளம் வரை புகை பரவ தொடங்கியது. இதனால் ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன், போக்குவரத்து நிலைய அலுவலர் அருணாசலம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே அங்கு வந்து ஹோட்டலின் மின்சார இணைப்பை துண்டித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை முழுமையாக அணைத்தனர்.

தீ விபத்தை அணைக்கும் முயற்சியில் தீயனைப்பு வீரர்கள்

அதைத் தொடர்ந்து ஹோட்டல் அறைக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு கீழே அழைந்து வந்தனர். தீ விபத்து குறித்த தகவல் அருகில் குடியிருக்கும் பொதுமக்களிடம் பரவியதால் அப்பகுதியில் மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தொண்டு நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து 4 பேர் உயிரிழப்பு!

Intro:தூத்துக்குடியிலுள்ள தனியார் ஹோட்டலில் தீ விபத்து - விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்.

Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி விஇ ரோட்டிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலில் (ஆல்வின்) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தூத்துக்குடி விஇ ரோட்டில் பிரபல தனியார் ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று இரவு 7.30 மணியளவில் ஹோட்டல் கீழ்தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அதில் ஏற்பட்ட தீயில் மள மள வென ஹோட்டல் மேல்தளம் வரை புகை பரவ தொடங்கியது. இதனால் ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கரன், போக்குவரத்து நிலைய அதிகாரி அருணாசலம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே அங்கு வந்து ஹோட்டலின் மின்சார இணைப்பை துண்டித்தனர்.தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை முழுமையாக அணைத்தனர்.

அதை தொடர்ந்து ஹோட்டல் அறைக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இந்த தகவல் அருகில் குடியிருக்கும் பொதுமக்களிடம் பரவியது. அப்பகுதியில் மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.