ETV Bharat / state

சினிமா தொடர்பான கேள்விகளுக்கு கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்! - tn news

பொது சிவில் சட்டம் என்பது மதத்தை சார்ந்தவர்களுக்கு எதிரானது என மாயையை உருவாக்கின்றனர் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் தமிழிசை!
கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் தமிழிசை!
author img

By

Published : Jul 5, 2023, 11:26 AM IST

தூத்துக்குடி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஹரிகேசவநல்லூரில் நடைபெற உள்ள ஸ்ரீஅரியநாதர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கு வந்தடைந்தார்.

அப்போது அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “பாரதப் பிரதமர் நேற்று சத்யசாய் என்ற அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஆன்மீகம் நமது நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுகிறது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த ஆன்மீகம் பறந்து பட்ட எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆன்மீகம் என்பது குறைவாகவே உள்ளது.

எம்பி கனிமொழி மீது குற்றச்சாட்டு: தூத்துக்குடி எம்பி கனிமொழியின் ஒரு கோரிக்கை ஒன்றை பார்க்கையில், அதில் ஒரு மதம் சார்ந்த ஒரு திருவிழாவிற்கு அதிக பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். இங்கு திருச்செந்தூரில் இருந்து எல்லா வழிபாட்டு தலங்களும் உள்ளது.

அதனால் பாரபட்சம் இன்றி எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் மகிழ்ச்சி. அப்படி இல்லையெனில், ஒரு மதத்தை சார்ந்து செய்வது சரியல்ல. இதில் ஏற்றத்தாழ்வும், பாரபட்சமும் இருக்கக் கூடாது.

இதையும் படிங்க: BJP Executive Arrested: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் கைது!

ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டி: தமிழ்நாட்டில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பற்றி பேசுவது தவறு என்ற எண்ணம் இருக்கக் கூடாது. முதலமைச்சரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீகம் இருக்க வேண்டும்.

மேலும், பாரத பிரதமர் சொல்வதுபோல நமது ஆன்மீகம் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதிக கோயில்கள் இருக்கும் இடமாக தமிழ்நாடு இருக்கின்றது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கஞ்சாவை எலி சாப்பிட்ட செய்தி குறித்து: கஞ்சாவை இளைஞர்கள் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால், கஞ்சாவை எலிகள் சாப்பிடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எலிகள் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகிறது. காவல் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு?

போலி பிஹெச்டி பட்டம்: சென்னை பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ பாஸ் ஆகாத ஒருவருக்கு பிஹெச்டி இடம் கொடுத்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்கலைக்கழகம் இப்படிப்பட்ட நிகழ்வில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாரத பிரதமர் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்றொரு திட்டத்தை கொண்டு வந்ததுபோல, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நல்ல பாதுகாப்பான இயற்கையான பூமிப் பந்தலை நாம் வருங்காலத்தில் கொடுக்க வேண்டும்.

பொது சிவில் சட்டம்: பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சமமானது. பாரத பிரதமர் தெளிவாக ஒரு குடும்பத்தில் ஒருத்தருக்கு ஒரு சட்டம், இன்னொருத்தருக்கு ஒரு சட்டம் என இல்லாமல் அனைவருக்கும் ஒரு சட்டம் என கூறுகிறார். பொது சிவில் சட்டம் ஒரு மதத்தை சார்ந்தவர்க்கு எதிரான சட்டம் என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும் என்று நாம் சமூக நீதி பேசிக் கொள்கின்றோம். சமூக நீதிதான் பொதுச்சட்டம். பொது சிவில் சட்டம் என்றால், பொதுவாக இருக்கின்ற ஒரு சட்டம் இது தவறாக முன்னிறுத்தப்படுகிறது என குறிப்பிட்டார்.

விஜய் அரசியல் மற்றும் மாமன்னன்: மேலும், விஜய் அரசியலுக்கு வருவாரா? மாமன்னன் திரைப்படம் குறித்த செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஆளுநர் தமிழிசை கையெடுத்து கும்பிட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: Rajinikanth: மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.