தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான ஐந்து அலகுகளைக் கொண்ட அனல் மின் நிலையம் இயங்கிவருகிறது. இங்குள்ள ஒவ்வொரு அலகும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாகும். இதில் 1, 2, 3 ஆம் அலகுகளில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஐந்தாவது அலகில் டர்பன் பழுது காரணமாக, கடந்த ஓராண்டாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நான்காவது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மின் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிக்கையில், காற்றாலைமின் உற்பத்தி அதிகரிப்பால் அனல்மின் நிலைய 4 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.