ETV Bharat / state

விபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு - pollachi jeyaraman relatives died

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர்கள் விபத்து  தூத்துக்குடி விபத்து  ஸ்டெர்லைட் ஆலை அருகே விபத்து  accident sterlite  pollachi jeyaraman relatives died  pollachi jeyaraman relatives died in accident near to sterlite factory
விபத்துக்குள்ளான கார்
author img

By

Published : Jan 18, 2020, 8:09 AM IST

Updated : Jan 18, 2020, 10:09 AM IST

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, எதிர்ப்புறம் வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளனாது.

இந்தக் கோர விபத்தில் கார், லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. இதனால், காரிலிருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்துக்குள்ளான கார்

பின்னர் காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்த நான்கு பேரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் மகள் வழிப் பிள்ளைகளான வீரேந்திரன், ரம்யா, அவரது தோழி பார்கவி, ஓட்டுநர் ஜோஸ்வா என்பது தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த இவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் இரண்டு காரில் சென்றுள்ளனர். ஒரு காரில் சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய மனைவி, மகளும், மற்றொரு காரில் வீரேந்திரன், ரம்யா ஆகியோரும் சென்றுள்ளனர்.

இதில், ஜோஸ்வா ஓட்டிவந்த கார் விபத்தில் சிக்கி நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சந்திரசேகரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: காரும் பேருந்தும் மோதி விபத்து: குழந்தை பலி

Intro:தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து:
தமிழக துணை சபாநாயகரின் உறவினர்கள் 4 பேர் பலி - லாரி ஓட்டுனர் கைது
Body:தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து:
தமிழக துணை சபாநாயகரின் உறவினர்கள் 4 பேர் பலி - லாரி ஓட்டுனர் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையானது எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய சாலை. இந்த சாலையின் வழியே சரக்கு போக்குவரத்திற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இன்று இரவு 11.30 தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைப்போல எதிர்திசையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில், லாரி ஸ்டெர்லைட் ஆலை பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது கார் டிரைவர் காரை திருப்பத்தில் திருப்ப முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. இதினால் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தினால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்த தகவல் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த 4 பேரும் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திபோஸின் மகள் வழி பேரன் வீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் ஓட்டுனர் ஜோஸ்வா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இவர்கள், சென்னையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் தமிழகத்தின் பல ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்க் கொண்டு விட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக 2 கார்களில் வந்துள்ளனர். ஒரு காரில் சந்திரபோஸ், அவருடைய மனைவி, மகளும், மற்றொரு காரில் மகள் வழிப்பேரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி, ஜோஸ்வா ஆகியோரும் வந்துள்ளனர். காரை ஜோஸ்வா ஓட்டிவந்துள்ளார். இதில் ஜோஸ்வா ஓட்டிவந்த கார் விபத்தில் சிக்கி 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக லாரி ஓட்டுனர் சந்திரசேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனவே விபத்துக்குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
Last Updated : Jan 18, 2020, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.