ETV Bharat / state

‘எத்தனைக் கட்சிதான் மாறுவார்... குழப்பத்தில் திருநாவுக்கரசர்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

author img

By

Published : Jan 20, 2020, 9:39 AM IST

தூத்துக்குடி: பல்வேறு கட்சிகளுக்குச் சென்று திரும்பிய திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் என்பது தெரியாமல் குழம்பி போயிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டலாக விமர்சித்துள்ளார்.

kadampur raju
kadampur raju

தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 222 முகாம்கள் அமைக்கப்பட்டு இதன் மூலம் 13,625 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

போலியோ சொட்டு மருந்து ஊற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

மத்திய நிதிநிலை அறிக்கை: அல்வா கொடுக்கத் தயாராகும் நிதியமைச்சர்!

நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு நடைபெற இருக்கின்ற தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி தொடரும். அம்மா நாளிதழ் குறித்து விமர்சனம் செய்த திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் என்று அவரே தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார். பல கட்சிகளுக்கு சென்று திரும்பியவர் திருநாவுக்கரசர்" என விமர்சித்து பேசினார்.

Intro:பல கட்சிகளுக்கு சென்று திரும்பிய திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் தெரியாமல் குழும்பி போய் இருக்கிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Body:பல கட்சிகளுக்கு சென்று திரும்பிய திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் தெரியாமல் குழும்பி போய் இருக்கிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி

தட்டாப்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 1,222 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்தியா முழுவதும் இளம்பிள்ளைவாதத்தை ஒழிக்கும் வகையில் அரசின் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 100% இளம்பிள்ளை வாதத்தை முடக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதரத்துறை மூலம் பொதுமக்கள் அதிகம் கூடு பேருந்து மற்றும் இரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1222 முகாம் அமைக்கப்பட்டு இதன் மூலம் 13,625 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது என்றார்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு நடைபெற இருக்கின்ற தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றார். அம்மா நாளிதழ் குறித்து விமர்சனம் செய்த திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் என்று அவரே தெரியாமல் குழும்பி போய் இருக்கிறார். பல கட்சிகளுக்கு சென்று திரும்பியவர் திருநாவுக்கரசர் என்றார்.

பேட்டி : அமைச்சர் கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் விளம்பரத்துறைConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.