ETV Bharat / state

கோழி திருடிய சிசிடிவி பதிவை ஏன் கொடுத்தீங்க.. கோவில்பட்டி அருகே அரிவாளுடன் வந்து மிரட்டல்..!

கோவில்பட்டி அருகே கோழி திருடிய சிசிடிவி காட்சிப் பதிவை போலீசாரிடம் அளித்ததற்காக, அரிவாளுடன் வந்து மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 26, 2022, 5:22 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் லாவண்யா, இவரது கணவன் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

லாவண்யாவின் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழி திருடு போய் உள்ளது. இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கேட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை லாவண்யா கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், எதிர் வீட்டிலிருந்து கோழி திருடு போனது குறித்த விசாரணையில் இவர்களின் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பெற்று விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, நேற்று (அக்.26) லாவண்யாவின் வீட்டிற்குள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்ற கும்பல் ஒன்று பட்டாசுகளை வீட்டின் முன் கொளுத்தியும் சத்தமிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு கேள்வி கேட்ட அப்பகுதியினரையும் மிரட்டியுள்ளனர்.

பின்னர், இது குறித்து ஏன் இப்படி செய்கிறீர்கள்.. எனக் கேட்ட லாவண்யாவையும் அவரது தாயாரையும், மூடப்பட்ட வீட்டு கேட்டின் மீது அத்துமீறி ஏறிய இருவர் அங்கிருந்த கார் ஒன்றின் மீது நின்றபடி மிரட்டியுள்ளனர். இது குறித்து லாவண்யா போலீசாரிடத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ், உட்பட 10 பேர் மீது இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டி பகுதியில் கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி வழங்கிய குடும்பத்தை, அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டியில் அரிவாளுடன் வந்து மிரட்டிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி

இதையும் படிங்க: ஆண் நண்பருடன் பழகிய மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.