தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள சினிமா தியேட்டரில் தனுஷ் நடித்த கர்ணன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரையரங்குக்கு படம் பார்க்க சென்ற இளைஞா்கள் சிலர் மது அருந்தியிருந்தால் அவர்களை படம் பார்க்க அனுமதிக்காமல் திரையரங்கு நிர்வாகிகள் பணத்தை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த இளைஞர்களில் சிலா் திடீரென தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டில்களில் பிடித்து திரையரங்கு வளாகத்தில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து, தென்பாகம் காவல் நிலையத்தில் திரையரங்கு நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். திரையரங்கில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தென்பாகம் காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீசியதாக தூத்துக்குடி ராஜீவ் நகர் சேர்ந்த நான்கு பேரை செய்தனர்.
இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!