ETV Bharat / state

அரசு அலுவலர் vs மக்கள் பிரதிநிதி: மீட்பு பணி குறித்த மாறுபட்ட கருத்து! - அரசு அலுவலர் vs மக்கள் பிரதிநிதி

தூத்துக்குடி: கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியரும், அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினரும் என இருவேறு கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது பொது மக்களை குழப்பியுள்ளது.

Rescue operations
Rescue operations
author img

By

Published : Dec 1, 2019, 9:55 PM IST

தூத்துக்குடியில் கடந்த இரண்டு வாரங்களாக விடாமல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 30ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதித்த இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

மீட்பு பணி

மழை பாதிப்பு குறித்து தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கூறுகையில், "தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் தற்போது பெய்துள்ள கனமழையால் இந்தப் பகுதி மேலும் மோசமடைந்துள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அனைவரும் சாலையில் திரண்டு நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் உள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த பணி நடைபெறுவதில் தாமதம் ஆகிறது" என்றார்.

மீட்பு பணி

மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மக்கள் பிரதிநிதியும் இருவேறு கருத்து தெரிவித்திருப்பது அனைவரையும் குழப்பியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகர் மீது பாய்ந்தது போக்சோ..!

Intro:கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்

Body:
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் மீட்பு பணிகள் தாமதம் ஏற்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த இரண்டு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடைவிடாது பெய்யத்தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

லூர்தம்மாள்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகினர்.
மழை பாதித்த பகுதிகளில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 30,000 அடி கனநீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 37 இடங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றுப் படுகைகள் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடியில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளம் பகுதியில் உபரியாக வெளியேற்றப்படும் சடயநேரி கால்வாய்க்கு திருப்பி விடப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை பாதித்த இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மழை பாதிப்பு குறித்து தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தெரிவிக்கையில், கடந்த மழைக்கே லூர்தம்மாள் புரம் பகுதியில் பெருமளவு வீடுகள் சேதம் அடைந்திருந்தன. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அப்போதே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் தற்போது பெய்துள்ள கனமழையால் இந்த பகுதி மேலும் மோசமடைந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அனைவரும் சாலையில் தான் திரண்டு நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் உள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த பணி நடைபெறுவதில் தாமதம் ஆகிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.