ETV Bharat / state

மதநல்லிணக்கத்தை போற்றும் பனிமய மாதா ஆலய திருவிழா - மதநல்லிணக்கம்

தூத்துக்குடி:  கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து, இஸ்லாமிய மக்களும் கலந்து கொள்ளும் பனிமய மாதா ஆலயத்தின் 10ஆம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பனிமய மாதா
author img

By

Published : Aug 6, 2019, 5:37 AM IST

புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 437ஆம் ஆண்டுப் பெருவிழா இன்று கோலாகலமாகக் நடைபெற்றது. இந்த ஆலயத்தின் ஆண்டுபெருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்த ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான நேற்று, தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை ஆயர் என்.ஏ.பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

பனிமய மாதாவின் தேர்பவனி உலா

இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான மாதா திருதேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பனிமய மாதாவை வணங்கி வழிபட்டனர். ஆண்டுதோறும் இத்திருவிழாவில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து, இஸ்லாமிய மக்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Intro:தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 10-ம்நாள் திருவிழா கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி புகழ்மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றான தூத்துக்குடி புனித பனிமய மாதா ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5 ம்தேதி நடைபெறும்.

ஏழுகடல் துறை அடைக்கலத்தாய் என்று தூத்துக்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 437ம் ஆண்டுப் பெருவிழா   இன்று கோலாகலமாகக்  கொண்டாடப்பட்டது. பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுபெருவிழா கடந்த ஜூலை26 ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து  10நாட்கள் ஜெபமாலை, மறையுரை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்த  நிலையில் ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான  இன்று மாலை மறை மாவட்ட முதன்மை குரு பேரருள்திரு.என்.ஏ.பன்னீர்செல்வம்தலைமையில் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பனிமய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பனிமய மாதாவின் திருவுருவ பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதாவின் சுரூபம் பேண்டு வாத்தியம் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் திருவீதிஉலா நடைபெற்றது. இந்த சப்பர பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பனிமய மாதாவை வணங்கி வழிபட்டனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தை பொறுத்தமட்டில் இத்திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் இஸ்லாமிய பெருமக்களும் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் கண்கவர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தது. பனிமயமாதா பேராலய ஆண்டுத் திருவிழாவில் உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.