தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் நமசிவாயராஜ் (55). இவர் ராஜாஜி பூங்கா முன்பு நடைப்பயிற்சிக்காக வந்துகொண்டிருந்தபோது அங்கு வந்த அண்ணா நகர், மணிநகரைச் சேர்ந்த சந்திரபோஸ் (44) என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த சந்திரபோஸ் செங்கலால் நமச்சிவாயராஜை தாக்கி கொலைசெய்தார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் குற்றவாளியை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான தாளமுத்து நகரைச் சேர்ந்த வேல்முருகன் (23) என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து சந்திரபோஸை கைதுசெய்தார்.