ETV Bharat / state

‘காவலர்கள் நீதிபதிகளாக மாறிவிடக்கூடாது’ - உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!

தூத்துக்குடி: காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் ஆகாது, காவல் அதிகாரிகள் நீதிபதிகளாகவும் மாறிவிடக்கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

thoothukudi
thoothukudi
author img

By

Published : Dec 16, 2019, 1:11 AM IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, புதிய நீதிமன்ற கட்டடங்களின் திறப்பு விழா உள்ளிட்டவை இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நீதிபதி என்.லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தனர்.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசுகையில், “150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் தற்பொழுது இன்னும் ஸ்திரத்தன்மையுடன் விளங்குகிறது. ஆனால், சமீபத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் எதுவும் அவ்வளவு ஸ்திரத்தன்மையோடு இருப்பதில்லை. எனவே பொதுப்பணித் துறை அலுவலர்கள், வரும் காலங்களிலாவது ஸ்திரத்தன்மையுடன் பயனுள்ள வகையில் கட்டடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நீதிபதி பாரதிதாசன் பேசுகையில், ”குடும்பநல நீதிமன்றங்களில் தற்போது அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதித்துறை குடும்பநல நீதிமன்றங்களை அமைத்து வருகிறது.

விழாவில் உரையாற்றிய நீதிபதிகள்

நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதற்கு நீதிமன்றங்கள் மட்டும் காரணமல்ல. காவலர்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதியை குறுக்கு வழியில் பெற இயலாது. நீதிமன்றத்தின் வழியே மட்டும் தான் நீதி பெறமுடியும்.

ஒருவரை குற்றவாளி என முடிவு செய்யும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. காவல் நிலையங்கள் நீதிமன்றங்களாக மாறிவிடக்கூடாது, காவல் அதிகாரிகள் நீதிபதிகள் ஆகவும் மாறிவிடக்கூடாது. சட்டத்தின் ஆட்சிதான் நாட்டில் நடக்க வேண்டும். அதேபோல் நீதித்துறை அமைப்பில் உள்ள எல்லோருக்கும் நீதி வழங்குவதில் சம பங்கு உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: என்கவுன்டரால் நீதி நிலைநாட்டப்படாது - எஸ்.ஏ. பாப்டே

Intro:பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடங்களை ஸ்திரத்தன்மையுடன் கட்டவேண்டும் - காவல் நிலையங்கள் ஒருபொழுதும் நீதிமன்றங்கள் ஆகாது, காவல் அதிகாரிகள் நீதிபதிகளாகவும் முடியாது - புதிய கட்டிட திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்Body: பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடங்களை ஸ்திரத்தன்மையுடன் கட்டவேண்டும் - காவல் நிலையங்கள் ஒருபொழுதும் நீதிமன்றங்கள் ஆகாது, காவல் அதிகாரிகள் நீதிபதிகளாகவும் முடியாது - புதிய கட்டிட திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழா, குடும்பநல நீதிமன்றம், போக்சோ சட்ட வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 4
உள்ளிட்டவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி என்.லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற ஸ்ரீவைகுண்டத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடக்க நிகழ்ச்சியில் நீதிபதிகள் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமா உள்பட நீதித்துறை நடுவர், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசுகையில்
நீதிபதிகள் நல்ல தீர்ப்பு தர வேண்டுமென்றால் நல்ல பார் அசோசியேஷன் இல்லாமல் அது முடியாது.
இங்கு நாம் தெளிவான தீர்ப்புகளை தரக்கூடிய நீதிபதிகளை உருவாக்க தவறி விட்டோம் என்ற ஆதங்கம் இருக்கிறது. நிதிபதிகளின் தீர்ப்புகள் வழக்கறிஞர்களுக்கு தான் பெருமை தேடித்தரும்.1937-ல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் தற்பொழுது இன்னும் ஸ்திரத்தன்மையுடன் விளங்குகிறது. ஆனால் சமீபத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் எதுவும் அவ்வளவு ஸ்திரத்தன்மையோடு இருப்பதில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரும் காலங்களிலாவது ஸ்திர தன்மையுடன் பயனுள்ள வகையில் கட்டிடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, நீதிமன்ற வளாகம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து அறிவிக்கை அளித்துள்ளது. அதை ஒப்பிட்டு நீதிமன்றம் கட்டுவதற்கான போதிய இடம் உள்ளதா? அதில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும். அது எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது அதை கொண்டு பொதுப்பணித்துறையினர் கட்டிடங்களை பயனுள்ள வகையில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் கட்டப்படவுள்ள நீதிமன்றத்தில் கூடுதலாக சார்பு நீதிமன்றங்களும் கட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வழக்கறிஞர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும்.
நீதித்துறை மீது மக்களுக்கு பயம் உள்ளது. அந்த பயதிற்கான காரணம், வழக்குகள் விசாரிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் திருப்தி இன்மை. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு முடிப்பதில் வக்கீல்களுக்கு 60 சதவீத பங்கு உள்ளது. வக்கீல்கள் தங்களை வளர்த்துக் கொண்டாலே இந்த பிரச்சனையை நாம் குறைக்கலாம் என்றார்.

நீதிபதி பாரதிதாசன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு துடிப்பும், இளமையும் மிக்க அதிகாரிகள் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பொறுப்புடனும், திறமையுடன் செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தை மேலும் சிறப்புற செய்ய வேண்டும்.

ஏழைகள் எளிதாக நீதித்துறையை அணுக வேண்டும் என்பதற்காகவும், எல்லோருக்கும் சம நீதி வழங்க வேண்டும் என்பதற்காகவும், விரைவாகவும் உடனடியாகவும் நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அந்தந்த தாலுகாக்களில் நீதிமன்றங்களை திறந்து வருகிறது.
குடும்பநல நீதிமன்றங்களில் தற்போது அதிக வழக்கு நிலுவையில் உள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம் அல்ல. ஆனாலும் நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதித்துறை குடும்பநல நீதிமன்றங்களை அமைத்து வருகிறது. அதே போல சிறார்கள் மீதான பாலியல் வழக்குகளும் பெருகிவருகிறது. இதனை முடிக்கும் வகையிலும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி அனைத்து நீதிமன்றங்களிலும் போக்சோ சட்ட சிறப்பு விசாரணை நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. குடும்ப நல நீதி மன்றங்களும், போக்சோ சட்ட விசாரணை நீதிமன்றங்களும் திறப்பது வரவேற்கத்தக்க விஷயம் அல்ல. இங்கு நீதிமன்றங்களை மட்டுமே நாங்கள் திறந்துள்ளோம். ஆனால் அவற்றில் வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.
குடும்ப நல வழக்குகள் நீதிமன்றங்களில் அதிகரித்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல. நீதிமன்றங்களில் அதிக வழக்கு தேக்கம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. நீதி மன்றத்தில் வழக்கு தேக்க நிலைக்கு நீதிமன்றங்கள் மட்டும் காரணமல்ல. குற்றவியல் வழக்குகள் குறித்து தென்மண்டல ஐஜி-யிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பொழுது முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அவர் கூறியிருந்தார். இதுபோல ஒவ்வொரு நிலையிலும் வழக்கானது தேக்கமடைந்துள்ளது. நீதியை குறுக்கு வழியில் பெற இயலாது. நீதிமன்றத்தின் வழியே மட்டும் தான் நீதி பெற முடியும். ஒருவரை குற்றவாளி என முடிவு செய்யும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. காவல் நிலையங்கள் ஒருபோதும் நீதிமன்றங்கள் ஆகாது. காவல் அதிகாரிகள் நீதிபதிகள் ஆகவும் முடியாது. சட்டத்தின் ஆட்சிதான் நாட்டில் நடக்க வேண்டும். அதே போல நீதித்துறை அமைப்பில் உள்ள எல்லோருக்கும் நீதி வழங்குவதில் சம பங்கு உள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் வருங்கால இளைய வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். சமரசமாக முடிக்க வேண்டிய வழக்குகளில் வழக்கறிஞர்கள் உரிய அறிவுரைகளை வழங்கி சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.