தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயம் தான் இவர்களது பிரதான தொழில் என்பதால், அப்பகுதியில் உள்ள மக்கள் குறையாமல், வீடுகளில் மூன்று நாய்களை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்துக்குச் செல்லும்போது. இரவு பகல் எந்த நேரத்திலும் துணைக்கு நாயை அழைத்துச் செலவ்துண்டு.
நாயை வளர்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட பன்னீர்குளம் கிராம மக்கள், நாய்களை 10,000 ரூபாய் முதல் இருபது ஆயிரம் வரை பணம் கொடுத்து வாங்கி வளர்த்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இந்த வளர்ப்பு நாய்களை சில மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்று குவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரவு நேரத்தில் தோட்டத்திற்குச் செல்லும் பெண்களுக்கு ஆண் துணை தேவையில்லை, நாய் இருந்தால் போதும் தைரியமாக சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வீட்டில் ஆடு மாடுகளை வீட்டிற்கு வெளியே கட்டிப் போட்டுவிட்டு அயர்ந்து தூங்குவார்கள். இந்நிலையில் இந்த கிராமத்தில், வாரத்தில் குறைந்தது இரண்டு, அல்லது மூன்று நாய்கள் விஷம் சாப்பிட்டு இறந்து போய்விடுகிறது. இப்படி மர்மமான முறையில் இறக்கும் நாய்களால் அக்கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்