ETV Bharat / state

'ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதே' - அமைச்சர் கடம்பூர் ராஜு - ஒடிடி தளத்தில் படங்கள் வெளியீடு

தூத்துக்குடி: கரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பைச் சமாளிக்க ஓடிடி தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

kadambur-raju
kadambur-raju
author img

By

Published : Jun 6, 2020, 6:02 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உச்சம் காணும் நிலையில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 143 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்றின் தீவிரத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு உதவும் இக்லியா எனும் தானியங்கி பரிசோதனைக் கருவியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவர் சைலஸ் உள்பட பலரும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்த 18 பேரை வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு பழக்கூடை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டிலேயே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் இக்லியா கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலமாக கரோனா தொற்று தீவிரத்தைக் கணக்கிட்டு, அதன் மூலமாக ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடியும். கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சமாளிக்க, தற்காலிகமாக புதிய திரைப்படங்களை ஓடிடி இணையதளத்தில் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து அனுமதிப்பது திரைப்படத் தொழிலுக்கு ஆரோக்கியமாக இருக்காது. ஏனெனில், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். தூத்துக்குடியில் புதிய இடத்தில் காய்கறிச் சந்தைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் " என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.