தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பன்னாட்டு அறைகலன் பூங்கா மற்றும் மொத்தத்தில், ரூ. 4,755 கோடி முதலீடு, 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 33 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்படி தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தெரிவித்துள்ள புதிய நிறுவனங்களின் பட்டியலை பார்க்கலாம்.
இதில், மரச்சாமான் மற்றும் தோல் பொருட்களால் அறைகலன்(பர்னிச்சர்) பொருட்களை உற்பத்தி செய்யவுள்ள இந்த 8 திட்டங்கள் மூலம் 2,845 கோடி ரூபாய் முதலீடும், 11,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
கையெழுத்தான புதிய நிறுவனங்கள்
- Hettich India Pvt Ltd - அறைகலன்கள்
- Deceuninck Profiles - ஜன்னல் மற்றும் கதவுகள்
- Manor & Mews - அறைகலன்
- New Century Sofa India - தோல் அறைகலன்கள்
- Vikas Exports - மரச்சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்
- Dileep Industries Ind - மரச்சாமான்கள் & கைவினைப் பொருட்கள்
- Marque impex - அறைகலன்
- Borotik - அறைகலன்
- மேலும், இந்நிகழ்வின்போது, சர்வதேச அறைகலன் பூங்காவில், தனது உற்பத்தித் திட்டங்களை நிறுவ முன்வந்துள்ள M/s. Hettich India Private Limited மற்றும் M/s. Deceuninck Profiles India Private Limited ஆகிய 2 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
தொழில் துறை சார்பாக இதர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தொழில் துறை சார்பில், 1,643 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,653 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி மற்றும் உரங்கள் / இரசாயனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நிறுவனங்கள் அமையவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்கள்
- LS Mills - ஜவுளி : தேனி, திண்டுக்கல் விருதுநகர், திருப்பூர்
- Rajapalayam Mills - ஜவுளி : விருதுநகர்
- Fishin India - கடல் உணவுகள் பதப்படுத்துதல் : கங்கைகொண்டான், திருநெல்வேலி
- Silverline Industries - உரம் & சல்பூரிக் அமிலம் : தூத்துக்குடி & சென்னை
- Kartya Textiles - ஜவுளி : விருதுநகர்
- Kasim Textiles Mills - ஜவுளி : விருதுநகர்
குறு, சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 267 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,373 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 19 நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டது.
இந்த முதலீடுகள், கட்டுமானம், உணவுப் பதப்படுத்துதல், கண்ணாடி உற்பத்தி, ஆடைகள் மற்றும் ஜவுளி, சூரிய ஒளி அடுப்புகள், அறைகலன், உரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய துறைகளில், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்கள்
- Sakthi Fly Ash Bricks - ஃப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தி, தூத்துக்குடி
- Viva Frozen Foods - மீன் பதப்படுத்துதல்
- Shaleo Marine Foods - மீன் பதப்படுத்துதல் & பனிக்கட்டி ஆலை
- Santhanam Packaging (P) Ltd - நெய்த பைகள் உற்பத்தி
- VAINI Fly Ash Brick & Block Manufacturers - ஃப்ளைஆஷ் செங்கல் & பேவர் பிளாக்ஸ்
- DeltaStar Power Projects Services Pvt Ltd - சூரிய ஒளி, LED, சுகாதார பராமரிப்பு & மருத்துவ சாதனங்கள்
- Victus Apparel (P) Ltd - ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்
சிவகங்கை, உள்ளிட்ட 19 நினைவுகளுடன் கையொப்பம் ஆனது. ஆக மொத்தம், 33 திட்டங்களின் வாயிலாக 4755 கோடி ரூபாய் முதலீடும், 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணையதளம்
முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணையதளத்தை (www.investingintamilnadu.com) முதலமைச்சர் தொடக்கி வைத்தார். இதில், தற்போது வளர்ந்து வரும் துறைகள் உட்பட அனைத்துத் துறைகள் பற்றிய முழு விவரங்கள், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்குத் தேவையான அனுமதிகள், ஒப்புதல்கள் மற்றும் நடைமுறைகள் போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட இந்த இணையதளமானது, முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் சார்ந்த ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிலத் தகவல் இணையதளம்
தமிழ்நாடு நிலத் தகவல் இணையத்தை (www.tnlip.com) முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த இணையதளம், தொழில் புரியத் தேவைப்படும் நிலங்களை விற்பவர்களையும், அந்நிலங்களை வாங்குபவர்களையும் இணைத்திடும் ஒரு தளமாக விளங்கும். பெரிய அளவில் நிலம் வைத்திருப்போர், அவர்களது நிலங்களை, இவ்விணையத்தில் பட்டியலிட்டுக் கொள்ளலாம்.
அவ்வாறே, நிலம் வாங்குவோரும், தங்களின் தொழில் தேவைகளுக்கேற்ற பொருத்தமான நிலங்களைப் பார்வையிடவும், விற்பனையாளர்களுடனும் தொடர்பு கொள்ளவும் இயலும். இந்நிலத் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்திடவும், இந்த இணைத்தில் பதிவு செய்யப்பட்ட சட்ட ஆலோசகர்கள் மூலம் சட்ட ஆலோசனைகளை பெற்றிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.