ETV Bharat / state

ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டத்தில் பயங்கர தீ விபத்து - 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் எரிந்து நாசம்! - நஷ்டம்

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தீ வாழைத் தோட்டங்களில் வேகமாக பரவி எரிந்து வருகிறது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான வாழைகள் தீயில் கருகின.

ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டத்தில் பயங்கர தீ விபத்து - 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் எரிந்து நாசம்!

author img

By

Published : Aug 7, 2023, 5:18 PM IST

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செய்துங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு கீழ்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. மேலும் 200 ஏக்கரில் நெல் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில் தற்போது தரிசு நிலமாக உள்ளது. இந்த நிலையில் இந்த வாழைத்தோட்டத்தின் பகுதியில் இன்று(ஆகஸ்ட் 7ஆம் தேதி) மதியம் திடீரென தீ பிடித்து உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயிகள் அருகில் இருந்த மோட்டார் செட் மூலம் தண்ணீர் ஊற்றி இந்த தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ வேகமாக அருகில் இருந்த வாழைத் தோட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. உடனே விவசாயிகள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் மற்றொரு இடத்திற்கு தீ அணைக்க சென்று விட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தீ வாழைத் தோட்டங்களில் வேகமாக பரவி எரிந்து வருகிறது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ஒரு லட்சத்திற்கும் மேலான வாழைகள் தீயில் கருகின. அறுவடை நேரத்தில் குலை தள்ளி இருந்த வாழைகள் மற்றும் வாழைத் தார்கள் தீயில் எரிந்து சாம்பலானது. தற்போது வரை அந்த பகுதிக்கு தீயணைப்புத் துறையினரோ, வாகனமோ வரவில்லை. இதனால் 25க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.