ETV Bharat / state

விவசாயிகளின் கடனை அடைக்க மத்திய அரசுக்கு மனமில்லை: கனிமொழி சாடல்

தூத்துக்குடி: விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதற்கு மத்திய அரசுக்கு மனமில்லை என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பாஜக அரசை சாடியுள்ளார்.

தூத்துக்குடி பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி
author img

By

Published : Mar 23, 2019, 8:10 AM IST

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டுனர்.

கூட்டத்தில் பேசிய கனிமொழி, "ஸ்டெர்லைட் விவகாரத்தில் எந்தவித காரணமும் இல்லாமல் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பிறகு அவருக்கு என்ன நேர்ந்ததென்று இதுவரை தெரியவில்லை.

அரசை எதிர்த்து யார் குரல்கொடுத்தாலும், அவர்கள் இந்த மண்ணிலே வாழ முடியாது என்ற மோசமான நிலையை அதிமுக, பாஜக அரசுகள் உருவாக்கியுள்ளன.

கடனடைக்க முடியாமல் சாராசரியாக ஒவ்வொரு ஆண்டும், 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதற்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் போதுமானது. ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதற்கு மனம் கொள்ளவில்லை.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்த 13 பேருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த அரசுகளுக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்ட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Intro:மத்திய அரசின் மக்கள் விரோத செயலால் ஆண்டுக்கு சராசரியாக 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - கனிமொழி

Body:மத்திய அரசின் மக்கள் விரோத செயலால் ஆண்டுக்கு சராசரியாக 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் - கனிமொழி பேச்சு செய்திக்காண வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

செய்தி மெயிலில் உள்ளது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.