ETV Bharat / state

'தேர்தலைச் சந்திக்க பயந்து போய் வழக்கு தொடுத்த திமுக' - அமைச்சர் கடம்பூர் ராஜூ! - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தயாராக இல்லாத திமுக, பயந்து போய் வழக்கு தொடுத்துள்ளதாக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விமர்சித்துள்ளார்.

மழை நீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

author img

By

Published : Dec 2, 2019, 5:42 PM IST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குறிஞ்சி நகர், செல்வநாயகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மழை நீரை வெளியேற்றும் பணிகளை, தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டார்.

அப்போது அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். அவர்களிடம் மாநகரப் பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;

”வடகிழக்குப் பருவ மழையை எதிர் கொள்ள மாவட்டத்தில் 403 ஊராட்சிகள், அனைத்து 19 பேரூராட்சிகளிலும் நகராட்சிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக, எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையில் 549 மி.மீ. மழை பெய்துள்ளது. குடிமராமத்து காரணமாக ஏரிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக மழை நமது மாவட்டத்திற்கு பெற்றுள்ளது. போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

தொடர்ந்து மழைப் பாதிப்பு ஏற்பட்டால், பொது மக்கள் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 53 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. 4 கால்நடைகள் உயிரிழந்தன. வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாளை நிவாரணத் தொகை வழங்கப்படும். ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கும் மழை நீரை அகற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சாலைகளை சரிசெய்து போக்குவரத்துச் சீராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்குள் 13 இடங்களில் உள்ள மருத்துவமனைகள் மூலம் சிறப்பு முகாம் ஏற்படுத்தி தொற்று நோய்கள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழை நீர் தேங்காதவாறு ரூ.74 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 90 விழுக்காடு கண்மாய்கள் நிரம்பியுள்ளன. அவைகளை எதிர் காலத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

”உள்ளாட்சித் தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டணி குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தொடரும் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறியிருக்கின்றார். உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஊரகப் பகுதிகளுக்குத் தனியாக தேர்தல் நடைபெறுவது நல்ல நடைமுறை. இதை நாங்கள் வரவேற்கின்றோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லாத திமுக பயந்து போய் உயர் நீதி மன்றத்தில் அவசர வழக்குத் தொடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தற்கால வெற்றி. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 20 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் சாயம் 20 நாளில் வெளுக்கத் தொடங்கிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி 100 விழுக்காடு வெற்றியைப் பெறும்” என்றார்.

இதையும் படிங்க: 'திமுக தான் எங்களுக்கு எதிரி; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு உதிரி’ - நச் பஞ்ச் அடித்த செல்லூர் ராஜூ

Intro:உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இல்லாத திமுக பயந்து போய் வழக்கு தொடுத்துள்ளது - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தாக்கம்.

Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குறிஞ்சிநகர், செல்வநாயகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மழை நீரை வெளியேற்றும் பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டார். அப்போது அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்களிடம் மாநகர பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்ற எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் இன்று அறிவிக்கப்ட்டிருக்கின்றது. கூட்டணி குறித்து முதல்வர், துணைமுதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தொடரும் என்று ஏற்கனவே முதல்வர் கூறியிருக்கின்றார். உள்ளாட்சி தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப்படாது. ஊரக பகுதிகளுக்கு தனியாக தேர்தல் நடைபெறுவது நல்ல நடைமுறை இதை நாங்கள் வரவேற்கின்றோம்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்திருப்பது குறித்து கேட்டதற்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இல்லாத திமுக பயந்து போய் இதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி தற்கால வெற்றி. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 20 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் சாயம் 20 நாளில் வெளுக்க தொடங்கிவிட்டது. உள்ளாட்சி தோதலில் அதிமுக கூட்டணி 100 சதவீத வெற்றியை பெறும் என்றார்.

பேட்டி : கடம்பூர் செ.ராஜூ - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.