ETV Bharat / state

சத்துணவில் அழுகிய முட்டை என அண்ணாமலை புகார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!

author img

By

Published : Dec 11, 2022, 2:55 PM IST

சத்துணவில் வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்த நிலையில், அறிக்கையின் மூலம் பலமுறை கூறியும் அவர் மண்டையில் ஏறவில்லை அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுத்துள்ளார்.

சத்துணவில் அழுகிய முட்டை என அண்ணாமலை புகார்; அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

தூத்துக்குடி: மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவருட்சிலைக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமூகநலன் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், ”போக்குவரத்தின் போது சில முட்டைகள் உடைந்து அழுகும் நிலை ஏற்படுகிறது. இம்மாதிரியான முட்டைகள் கண்டறியப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டு மாற்றப் பட்டு வருகிறது இது தான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.இம்மாதிரி 6இடங்களில் இல்லை 50 இடங்களில் கூட இருக்கலாம். இது எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற வழிமுறைதான் அதுவும் மாற்றப்பட்டு வருகிறது. இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளேன். அவர் மண்டையில் தான் ஏறவில்லை ஏன் என்று தெரியவில்லை” என்று அண்ணாமலையின் புகாருக்கு பதிலளித்தார்.

பண மதிப்பிழப்பு கொள்கையின் மீதான குற்றச்சாட்டைக் காலம் காலமாக எதிர்க்கட்சிகள் கூறி வருகிறோம். இதனால் பொருளாதாரம் ஏற்றம் இல்லை மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர் . நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை எங்கள் தலைவர் ஸ்டாலினைப் பத்தி பேசுவதற்குத் தகுதியில்லை. எங்களது தொண்டர்கள் கொள்கை ரீதியான தொண்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் அமைத்ததில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. கடற்கரையோரம் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என்பதற்காகவே மரப்பாலம் அமைக்கப்பட்டது. மரத்தையே ஒடித்து போடும் புயல் மரப்பாலம் எம்மாத்திரம் புயலால் மரப்பாலம் பாதிக்கப்பட்டுள்ளது அதை விரைவில் மாற்றி அமைத்து விடுவோம் இதை எதிர்க்கட்சியினர் கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்றே கூறி வருகின்றனர்” இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க:46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 - அண்ணாமலை தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.