ETV Bharat / state

“திமுகவில் 95 சதவீதம் இந்துக்கள் உள்ளனர்” - அமைச்சர் கீதா ஜீவன் - Vaikundapathi Perumal Temple in Thoothukudi

Minister Geetha Jeevan: திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று மக்கள் மத்தியில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் 95 சதவீதம் இந்துக்கள் உள்ளனர்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 11:52 AM IST

திமுகவில் 95 சதவீதம் இந்துக்கள் உள்ளனர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான வைகுண்டபதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்காக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின. அதன்பின் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறாமல் இருந்தன.

இந்நிலையில், திருப்பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுகச் செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை கோயில் அர்ச்சகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, திருப்பணிகள் நடபெறுவது குறித்து அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், திருப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, “வைகுண்டபதி பெருமாள் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள் காலதாமதம் ஏற்பட்டு அப்படியே விடப்பட்டது. தற்போது, திமுக அரசு இந்த திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு சிறப்பாக நடத்தப்படும்.

மேலும், அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை உடனடியாக மீட்கப்பட்டு, அந்தந்த கோயில் வசம் ஒப்படைக்கப்படும். திமுகவில் 95 சதவீதம் இந்துக்களே உள்ளனர். ஆனால், தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று மக்கள் மத்தியில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கருணாநிதியின் கருத்து என்னவென்றால் மத உணர்வு இருக்கலாம். ஆனால், மதவெறி இருக்கக் கூடாது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக, அமைதியாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில், ஒரு சிலர் தேவையற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் மதிக்கும் கட்சியாக என்றும் திமுக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள திருக்கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 1,000 திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமாதானத் திட்டம் நிறைவேற்றம்; வணிகர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா - விக்கிரமராஜா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.