தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் P.ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கும் முயற்சியாக மினி மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று(பிப்:07) விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்த மினி மாரத்தான் போட்டியில் திருச்சி நேஷனல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் முருகன் என்பவர் முதலிடத்தையும், விளாத்திகுளம் அத்லெடிக் கிளப் மாணவர்கள் வெங்கடேஷ், கற்குவேல் இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
இதேபோன்று 10 கிலோ மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட பெண்கள் பிரிவில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தங்க முத்துமாரி என்ற மாணவி முதலிடத்தையும், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கோகிலா இரண்டாமிடத்தையும், விளாத்திகுளம் பள்ளியைச் சேர்ந்த மாணவி ராதிகா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுத் தொகை, பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: