ETV Bharat / state

பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - Marxist Communist Party (Marxist protest demanding the issuance of a strap at Thoothukudi

தூத்துக்குடி: கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Marxist Communist Party Demonstration
Marxist Communist Party Demonstration
author img

By

Published : Nov 27, 2019, 11:18 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா, ஆறுமுகம், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது மாவட்ட செயலாளர் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

பட்டா வழங்க்கோரி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆனால் இந்த அரசாணை நீதிமன்ற உத்தரவின்பேரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது வருந்தக்கூடியது. பல வருடங்களாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் இந்த அரசாணையை செயல்படுத்த வேண்டும்.

இல்லையெனில் தனியாரிடம் இருந்து நிலத்தை வாங்கி வீட்டுமனை பட்டா வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

பட்டா வழங்கிய இடத்தை தரக் கோரி ஆதிதிராவிட மக்கள் போராட்டம்!

Intro:கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா, ஆறுமுகம், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் அர்ஜுனன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த அரசாணையை நீதிமன்றம் உத்தரவின்பேரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது வருந்தக்கூடியது.
பல வருடங்களாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் இந்த அரசாணையை செயல்படுத்த வேண்டும் அல்லது தனியாரிடம் இருந்து நிலத்தை வாங்கி வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.