ETV Bharat / state

சங்க கால கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள ஆய்வுப்பணிகள் தொடக்கம்! - சங்க காலக் கொற்கை துறைமுகம்

சங்க கால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காணுவதற்கு கடல்சார் முன்கள ஆய்வுப் பணிகளை தூத்துக்குடி புதிய துறைமுகப்பகுதியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சங்க காலக் கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள ஆய்வுப் பணிகள் தொடக்கம்..!

author img

By

Published : Sep 3, 2022, 10:35 PM IST

தூத்துக்குடி: தொல்லியல் துறை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து சங்க கால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காணுவதற்கு கடல்சார் முன்கள ஆய்வுப்பணிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் தொடங்கின. தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் சாகர் தாரா ஆய்வுக் கப்பல் கடலில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பணிகளை தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ”தமிழ்நாட்டில் மாநில தொல்லியல் துறை சார்பாக 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி என்பது நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அந்த வகையில் கொற்கைத் துறைமுகம் இருந்த பகுதியாக உள்ள கடல் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான பணிகள் இன்று(செப்.3) தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 கி.மீ. கடல் பகுதியில் இந்த முன்கள அகழ்வாராய்ச்சி என்பது நடைபெறும். தொடர்ந்து இந்த அகழ்வாய்வு கிடைக்கக்கூடிய ஆவணங்களைக் கொண்டு அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணி என்பது நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

சங்க கால கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள ஆய்வுப்பணிகள் தொடக்கம்!

மேலும், ’’கொற்கையில் ஏற்கெனவே அகழாய்வு மேற்கொண்டதில் கங்கை சமவெளிக்கு இங்கிருந்து வாணிபம் நடந்துள்ளது. ரோம் நாடு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கொற்கையில் இருந்து வாணிபம் நடைபெற்றுள்ளது. கி.மு 8ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் கொற்கை வாணிபம் நடந்துள்ளது.

கொற்கை துறைமுகம் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிய இந்த ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வின் மூலம் கொற்கை நாகரிகத்தை வெளிக்கொண்டுவர இந்த ஆய்வு உதவும். பொருநை அருங்காட்சியகம் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அதற்கானப் பணிகள் தொடங்கும்.

கொற்கை துறைமுகத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் கடல்சார் ஆய்வுப் பணி தற்போது முதற்கட்ட முன்கள ஆய்வுப் பணி தொடங்கியுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: புற்றுநோய்ப்பாதிப்பு என்பது நமக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.