மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து, சேலம் வந்தடைந்த இந்த 600 பேர் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 பேர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் விடுதி கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் கலா, மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டு அவர்களைக் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 'இது அன்னை கொடுத்த தைரியம்'- பினராயி விஜயன்