தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது குலசேகரப்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மைசூரு தசரா விழாவிற்கு அடுத்தப்படியாக நாட்டிலேயே அதிக பக்தர்கள் கூடும் இடம் முத்தாரம்மன் தசரா விழாவாகும்.
தசரா திருவிழா செப்டம்பர் 29ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து செவ்வாடை உடுத்திய ஏராளமான பக்தா்கள் தங்கள் கையில் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினர்.
இங்கு விரதத்தோடு வரும் பக்தர்கள் வேண்டுதலோடு பலவிதமான வேடங்களை ஏற்று தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து காணிக்கைகளை நிறைவேற்றுவார்கள். இன்று நள்ளிரவில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் சுமார் ஆறு லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.