ETV Bharat / state

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம் - Dussehra Festival

தூத்துக்குடி குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்

author img

By

Published : Oct 5, 2022, 12:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ தொலைவில் அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரருடன் அன்னை முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இக்கோயில் உள்ளூர் மக்கள் மட்டுமே வழிபடும் ஒன்றாகத்தான் இருந்து வந்தது.

புரட்டாசி மாதம், நவராத்திரி காலங்களில் சில ஊர்களில் இருந்து மக்கள் தங்களுக்கு அம்மை நோய் வந்தால், அதை குணப்படுத்த வேண்டி நேர்த்தி எடுப்பர். பின்னர் குணம் அடைந்தவுடன், அவர்கள் தங்களது சொந்த ஊரில் ஐந்து அல்லது பத்து வீடுகளில் தர்மம் எடுத்து அந்த காணிக்கையை முத்தாரம்மனுக்கு செலுத்தித் தங்கள் நன்றியை அம்மனுக்கு செலுத்துவது வாடிக்கையாக இருந்து வந்தது.

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்

கோயில் பயணித்த பாதை: இந்த காலத்தில் சிலர் தங்களின் கஷ்டம், நோய் நீங்க மற்றும் செல்வம் வேண்டியும் வழிபாடு செய்துள்ளனர். ‘கேட்டவருக்கு கேட்ட வரத்தை, இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்தாள் அன்னை’ என தன்னைத்தேடி வரும் மக்களுக்கு எல்லா செல்வங்களையும் பாகுபாடு இல்லாமல் உண்மையான அன்போடு அளித்ததனால், அம்மனின் புகழ் பக்கத்து கிராமத்தில் இருந்து பக்கத்து மாவட்டத்திற்கும் சென்றது.

தொடர்ந்து அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்குச் சென்று, இன்று நாடு விட்டு நாடு செல்லும் அளவிற்கு அம்மனின் புகழ் உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு ஊரின் கோயில் சிறப்பையும் அந்தந்த ஊரில் இருக்கும் மக்கள் பிரபலமாக பேசுவதுன்டு.

அம்பாள் பல்வேறு விதமான திருக்கோலங்களில் வீதி உலா

ஆனால் முத்தாரம்மனின் சிறப்பை, எந்த ஊரில் எல்லாம் முத்தாரம்மனின் பக்தர்கள் இருக்கிறார்களோ, அவர்களே சொல்வார்கள். அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள்புரியும் காட்சி காண கிடைக்காத ஒன்றாகும். கர்ப்ப கிரகத்தில் சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் சுயம்புவாக தோன்றிய திருமேனிகள் சிறிய அளவில் இன்றளவும் உள்ளது.

அம்பாளின் அமைப்பு: ஒரே கல்லில் அன்னையும் அப்பனும் சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புத கோயில் இது. அன்னையின் சிரசில் ஞானமூடி சூடி கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்து, கழுத்தில் தாலிக்கொடியுடனும், வலது காலை மடித்து சந்திரகலையுடன் இருருக்கிறாள் அன்னை முத்தாரம்மன்.

அருகில் அமர்ந்திருக்கும் அப்பன் ஞானமூர்த்திஸ்வரர் ஒரு கையில் செங்கோல் (கதாயுதம்) தாங்கியும், மறுகையில் விபூதி கொப்பரையும் வைத்து இடது காலை மடித்து சூரியகலையுடன் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். கோயிலின் மகா மண்டபத்திற்குள் பேச்சியம்மன், கருப்ப சுவாமி, பைரவர் ஆகியோரும் சிலை வடிவமாக காட்சி அளிக்கின்றனர்.

கோயில் எதிரில் அமர்ந்திருக்கும் கொடிமரம் 32 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் செப்புத்தகட்டினால் வேயப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற இந்த தசரா திருவிழாவானது, இந்தியாவில் கர்நாடக மாநில மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்திஸ்வர சமேத முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவாக உள்ளது.

தசரா சூரசம்ஹாரம்: ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு தசரா திருவிழா தொடங்குவது வழக்கம். தொடர்ந்து பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் திருவிழாவில், நாள்தோறும் அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறும்.

நாள்தோறும் இரவில் அம்பாள் பல்வேறு விதமான திருக்கோலங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு விதமான காளி, ராஜா ராணி, ஆஞ்சநேயர், பெண், தர்மம்(பிச்சைக்காரன்) என பல்வேறு வடிவில் வேடம் அணிந்து வீதி வீதியாக, வீடு வீடாக, மேளம், தாளம் முழங்கிய நிலையில் அந்த அருளோடு மக்களுக்கு குறி சொல்லியும் காணிக்கை பெற்றும் வருகின்றனர்.

மேலும் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் இன்று (அக் 5) நடைபெறுகிறது. இந்த சூரசம்காரம் நாளில் வேடங்கள் அணிந்து பெரும் காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

தசரா திருவிழா நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதால் தசரா திருவிழா களைகட்டி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளுக்கு அடுத்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு பின், தசரா திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தசரா திருவிழா களை கட்டி உள்ளது.

இதையும் படிங்க: தசரா நாளில் ராவணனை வணங்கத் தயாராகும் பஞ்சாப் குடும்பத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.