ETV Bharat / state

பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் கணக்கில் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவானது... கே.எஸ். அழகிரி - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்கள், ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது, அந்த வாக்குறுதி என்னவானது என கே.எஸ். அழகிரி காட்டம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி

author img

By

Published : Aug 26, 2022, 10:52 PM IST

தூத்துக்குடி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தியின் ’இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம்’ பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரிவெல்ல பிரசாத், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், விஜயதாரணி, ஜோதிமணி, திருநாவுக்கரசர், மற்றும் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முரளிதரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ’வருகிற 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ராகுல் காந்தி பிரசார நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் நோக்கி பிரசார பயணம் நடைபெற உள்ளது. 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மூன்று நாட்களும் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நடைபயணத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நடைபயனமானது, பாஜகவின் தவறான பொருளாதாரத்தை எதிர்த்தும், இந்தியாவில் மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற காந்திய தத்துவத்தை வலியுறுத்தியும் நடைபெற உள்ளது. இது மிகப்பெரிய தேசிய புரட்சியாக கருதப்படுகிறது. இதை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள சீர்திருத்தவாதிகள் புரட்சியாளர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் பாஜக 23 இடங்களை தேர்தலில் கேட்டுப்பெற்றது. ஆனால், நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் இன்றைய தலைவரும், அன்றைய தலைவரும் வெற்றி பெறவில்லை. ஆனால், காங்கிரஸ் 25 இடங்களை தேர்தலில் சந்தித்து 18 இடங்களை வெற்றி பெற்றது. இதில் எங்களுடைய வெற்றி சதவிகிதம் 72 ஆகும். காங்கிரஸ்-க்கும் ஒரு திராவிட கட்சி துணையாக இருந்தது. பாஜகவிற்கும் ஒரு திராவிட கட்சி துணையாக இருந்தது. அப்பொழுது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தனர். மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியில் இருந்தனர்.

காங்கிரஸ் மத்தியிலும் ஆட்சியில் இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. ஆனாலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதிலிருந்து யார் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். யார் பலம் பெற்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது. மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு இந்தியா முழுவதிலும் உள்ள எங்களைப் போன்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 5 வருடத்திற்கானது. அதற்குள்ளாக அனைத்து வாக்குறுதிகளை பற்றியும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

அது போன்று தான் ஆயிரம் ரூபாய் இல்லத்தரசிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்துவது என்பதும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்கள். ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. அந்த வாக்குறுதி என்னவானது. முதலமைச்சர் ஸ்டாலின் மெல்ல மெல்ல எறும்பு ஊற பாறையும் தேயும் என்பது போல தனது திட்டங்களை மெது மெதுவாக நிறைவேற்றி வருகிறார். அதை நான் பாராட்டுகிறேன். வரவேற்கிறேன்.

பாஜக ஊழலற்ற ஆட்சி நடத்தி வருவதாக கூறுவது தவறு. குற்றச்சாட்டு ஊழல் வழக்கு அவர்கள் மீது உள்ளது. குலாம் நபி ஆசாத் பற்றி கூறும்பொழுது அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாங்கள் மாற வேண்டிய சூழ்நிலை வரும்போது தலைமை மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி

பாஜக அரசு பத்மபூஷண் விருதை இருவருக்கு வழங்கியுள்ளது. அதில் ஒருவர் குலாம் நபி ஆசாத்; மற்றொருவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த புத்ததேவ் பட்டாசார்யா.

இதில் புத்ததேவ் பட்டாசார்யாஜி விருது பெற தகுதி உடையது. ஆனால், விருதை வழங்குபவர் தகுதியில் சிறியவர், அதனால் எனக்கு அந்த விருது வேண்டாம்’ என்றார்.

அதே சமயம் குலாம் நபி ஆசாத் விருதினை பெற்றுக் கொண்டார். இதிலிருந்து தெரிகிறது அவர் என்ன எதிர்பார்த்து இருப்பார் என்று’ என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் காட்டமாக கூறினார்.

இதையும் படிங்க: பரந்தூரில் ஏர்போர்ட் வர காரணம் எம்.பி. கனிமொழி தான்... சீமான் பகிரங்க குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.