தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த மாடசாமி, ஜெயலட்சுமி தம்பதியின் மகள் அனுஷா நித்யஸ்ரீ. சுப்ரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, சுப்புலட்சுமி தம்பதியின் மகள் காயத்ரி.
மாணவிகள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பயனாக, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் அனுஷா நித்யஸ்ரீ, காயத்ரி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவிகளின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளியாக உள்ளனர். நீட் தேர்வில் மாணவிகள் வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் ரூத் ரத்தினகுமாரி மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் வென்ற இலங்கைத் தமிழரின் மகள்' - இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முயற்சி!