ETV Bharat / state

நீட் தேர்வு இல்லாத சூழலை முதலமைச்சர் உருவாக்குவார்: கனிமொழி நம்பிக்கை - thoothukudi district news in tamil

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்குவார் என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.

kanimozhi-says-cm-will-create-an-environment-no-neet-exam-in-tn
நீட் தேர்வு இல்லாத சூழலை முதலமைச்சர் உருவாக்குவார்: கனிமொழி நம்பிக்கை
author img

By

Published : Jun 6, 2021, 11:30 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை தமிழ்நாட்டிலே முதல்முறையாக தொகுதி மக்கள் நலன்கருதி கரோனா சிகிச்சை மையத்திற்காக விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வழங்கினார். இதனை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.

பின்னர், அங்கு கரோனா தடுப்பூசி செலுத்தம் பணியை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் கனிமொழி வழங்கினார். தொடர்ந்து இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மாரியாதை செய்தார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளடங்கிய கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி பேட்டி

விளாத்திக்குளம் எம்.எல்.ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன், "தமிழ்நாட்டில் முதல் முறையாக கரோனா காலகட்டத்தில் தொகுதி மக்கள் பயன்படும் வகையிலும், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள இடப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டும் எனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையத்திற்காக வழங்கியுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உயர் படிப்பிற்காக நடத்தப்படும் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்கான முன்னேற்பாடாக தமிழ்நாடு அரசு ஒரு ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது.

kanimozhi says cm will create an environment no neet exam in tn
கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கிய கனிமொழி

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட் தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்குவார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.