தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாசார்பட்டி கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும் என அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கினார்.
இதைத்தொடர்ந்து கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாசார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர்களுக்கு சுமார் 200 பேருக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!