ETV Bharat / state

கழுகாசலமூர்த்தி கோயில் மலர் காவடி பெருவிழா; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுச் சிறப்பு வழிபாடு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 5:17 PM IST

Kalugasalamoorthy Murugan Temple: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் நடைபெற்ற மலர் காவடி பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலர் காவடி எடுத்துச் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
கழுகாசலமூர்த்தி கோயில் மலர் காவடி பெருவிழா; ஏராளமான பக்தர்கள் மலர் காவடி எடுத்து சிறப்பு வழிபாடு!

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் மிகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி குடைவரை திருக்கோயிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் எந்த ஒரு முருக தளங்களில் நிகழாத சிறப்பு அம்சமான மலர்க் காவடி விழா நடைபெற்று வருகின்றது. இந்த மலர் காவடி விழா முருக பக்தர்கள் சார்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மலர் காவடி உலாவை முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் இன்று (ஜன.08) காலை நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்க் காவடி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மலர்க் காவடி நிகழ்ச்சிக்கு மாநில முருக பக்தர்கள் பேரவையைத் தோற்றுவித்த பேரூராதீனம் கயிலைக்குருமணி திருப்பெருந்திருசாந்தலிங்க இராமசாமி அடிகளார் தலைமையில் மலர் காவடி ஊர்வலம் தொடங்கியது.

இதில், சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கழுகாசலமூர்த்தி விரதம் இருந்து தாங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மலர் காவடி எடுத்து திருக்கோயில் இருந்து புறப்பட்டு கோவிலில் சுற்றியுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர்.

தொடர்ந்து, மலர் காவடியின் மலர்களால் கழுகாசலம் மூர்த்தி புஷ்ப அஞ்சலி செய்யப்பட்டு தீபாரனை காட்டப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "அரசின் பொங்கல் தொகுப்பில் மண் பானை சேர்த்து வழங்க வேண்டும்" - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.