ETV Bharat / state

TMB IT Raid: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் விடிய விடிய நடந்த சோதனை!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank Limited) நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில், இன்று காலை முடிவடைந்தது. மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Income Tax department raid started yesterday at Thoothukudi Tamilnad Mercantile Bank head office raid completed today early morning
விடிய விடிய நடந்த சோதனை
author img

By

Published : Jun 28, 2023, 9:59 AM IST

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அதிகாரிகள் வெளியேறிய காட்சி

தூத்துக்குடி: தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அலுவலகத்தில் சென்னை புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு இயக்குநரக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஜூன் 27) காலை 10:30 மணி முதல் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.

இந்த சோதனையில் வங்கி அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து வங்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை 10:30 மணி முதல் ஆரம்பித்த இந்த சோதனையானது இன்று காலை வரை விடிய, விடிய தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 28) காலை 6:10 மணிக்கு முடிவடைந்தது. மேலும், அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பைகளில் எடுத்து சென்றனர். வருமானவரித்துறை அதிகாரிகளிடம் இந்த திடீர் சோதனைக்கான காரணம் குறித்தும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் கேட்ட போது தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தலைமையிடத்தில் நடைபெற்ற சோதனை குறித்து வங்கியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கோரிய விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளித்து, தேவையான தகவல்களை தொடர்ந்து வழங்குவோம். வங்கியின் வணிகச் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்தன. மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த ஐந்து வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் டைம் டெபாசிட் , டிவிடெண்ட் பண்ட், மக்களுக்கு கொடுக்கப்படும் வட்டி ஆகியவை குறித்து முறையாக கணக்கு காட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கிரெடிட் கார்டு தொடர்பான பரிவர்த்தனைகளில் கடந்த நான்கு வருடத்தில் கணக்கு காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் முறையாக பதில் அளிக்காததால் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான கிருஷ்ணன் சுப்பிரமணியனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சோதனையில் ஏதும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு உள்ளதா என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: Producer Ravindar: கிளப் ஹவுஸ் மூலம் ரூ.15 லட்சம் மோசடி; தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.