ETV Bharat / state

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள் ஆய்வு! - Election 2019

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தூத்துக்குடி பகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான ஆய்வுகள் அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள் ஆய்வு!
author img

By

Published : Mar 31, 2019, 4:19 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அந்தந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் பத்திரமாக வைப்பதற்கான ஆய்வுகள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள் ஆய்வு!

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்தே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக வைப்பதற்கு தேவையான இடங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

தற்போது அஞ்சல் வாக்குக்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இரண்டாவது கட்டமாக வேட்பாளர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பேசுகையில்,

வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போட திட்டுமிட்டுள்ளோம். தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மத்திய காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திற்கு முதற்கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி அந்தந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் பத்திரமாக வைப்பதற்கான ஆய்வுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை வ. உ. சி. அரசு பொறியியல் கல்லூரியில் வைத்தே நடத்த மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை பத்திரமாக வைப்பதற்கு தேவையான இடங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

தற்போது தபால் ஓட்டுக்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது கட்டமாக வேட்பாளர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் எனக்கூறினார்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேசுகையில், வாக்கு எண்ணிக்கைக்காக 3 அடுக்கு பாதுக்காப்பு போட திட்டுமிட்டுள்ளோம். தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மத்திய போலீசார், தமிழ்நாடு போலீஸ் ஆகியோர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தோராயமாக 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவார்கள் எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர் சிம்ரான் சிங், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.