தூத்துக்குடி: குற்றச்செயல்களை குறைக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகள், இடங்கள், சாலைகள் போன்றவற்றில் கன்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த காவல் சரக உட் கோட்டங்களில் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குண்டர் சட்டத்தில் 100பேர் கைது
மேலும், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா கடத்தல், புகையிலை விற்பனை, கொலை, கொள்ளை, பாலியல் தொழிலில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கைகளில் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆறு மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேர், போக்சோ வழக்குளில் சம்மந்தப்பட்டவர்கள் 13 பேர், கஞ்சா, போதைப் பொருள் கடத்தளில் ஈடுபட்ட 8 பேர், மணல் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் ஒருவர், சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் என மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரையில் ரவுடிகளை ஒழிக்க அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திரபாபு