ETV Bharat / state

'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும்' - தூத்துக்குடியில் மனித உரிமைகள் நாள் விழா

தூத்துக்குடி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகும் என சேவை மைய நிர்வாகி ராஜேந்திர பிரசாத் கூறினார்.

human_rights_day
human_rights_day
author img

By

Published : Dec 10, 2019, 10:36 PM IST

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் உதவி மையம், "சிறகுகள் விரிய" சேவை அமைப்பு ஆகியவை சார்பில் மனித உரிமைகள் நாள் விழா தூத்துக்குடியில் உள்ள மகளிர் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மனித உரிமைகள் குறித்த சட்டங்கள், மனித உரிமைகள், மனிதக் கடத்தல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள், தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ - மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்.

மனித உரிமைகள் நாள் விழா

இதைத்தொடர்ந்து, சேவை மைய இயக்குநர் ராஜேந்திர பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 55 விழுக்காடு மாணவர்கள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முன்வருவதில்லை. இவ்வாறாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துபவர்கள் தான்‌ வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்காக கடத்தப்படுகிறார்கள்.

சேவை மைய நிர்வாகி ராஜேந்திர பிரசாத் செய்தியாளர் சந்திப்பு

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையினால் கற்றலில் மாணவர்கள் இடைநிற்றல் என்பது மேலும் அதிகமாகும். ஏனெனில் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வு நடத்தப்படும் எனும் திருத்தம் புதிய கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் பொதுத்தேர்வை நினைத்து மாணவர்களுக்கு ஏற்படும் அச்சம் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழல் ஏற்படும். எனவே, இந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்' என்றார்.

இதையும் படிங்க: 'விலை இருந்தும் விற்பனை செய்ய முடியவில்லை' - மழையில் அழுகிய சின்ன வெங்காயத்தால் விவசாயிகள் வேதனை!

Intro:மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும் - சேவை மைய நிர்வாகி ராஜேந்திர பிரசாத் பேட்டி

Body:மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும் - சேவை மைய நிர்வாகி ராஜேந்திர பிரசாத் பேட்டி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் உதவி மையம், "சிறகுகள் விரிய" சேவை அமைப்பு ஆகியவை சார்பில் மனித உரிமைகள் நாள் விழா தூத்துக்குடியில் உள்ள மகளிர் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித உரிமைகள் குறித்த சட்டங்கள், மனித உரிமைகள் மற்றும் மனித கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள், தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்.
இதில் சேவை நிறுவன இயக்குனர் ராஜேந்திர பிரசாத், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சேவை மைய இயக்குனர் ராஜேந்திரபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,
சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 55 சதவீத மாணவர்கள் 8 வகுப்புக்கு மேல் படிக்க முன்வருவதில்லை. இவ்வாறாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திபவர்கள் தான்‌ வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு கடத்தப்படுகிறார்கள். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையினால் கற்றலில் மாணவர்கள் இடைநிற்றல் என்பது மேலும் அதிகமாகும். ஏனெனில் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வு நடத்தப்படும் எனும் திருத்தம் புதிய கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் பொதுத்தேர்வை நினைத்து மாணவர்களுக்கு ஏற்படும் அச்சம் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழல் ஏற்படும். எனவே இந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.