ETV Bharat / state

சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

ஒட்டப்பிடாரம் தாலுகாவில் புதிதாக தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்பான காணொலி

author img

By

Published : Sep 20, 2021, 8:45 AM IST

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உள்பட்ட எஸ்.கைலாசபுரம் பகுதியில், புதிதாக தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கு கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம், உமரிகோட்டை உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தும் பதிலளிக்கப்படாததால் விரக்தி அடைந்த கிராம மக்கள், தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று (செப்.19) மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்பான காணொலி

அரசிடம் பொய் அறிக்கை வழங்கிய அலுவலர்கள்

போராட்டம் குறித்து கிராம மக்கள் பேசுகையில், “ஊருக்கு மிக அருகாமையிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதத்திலும் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு எங்களுக்கு விருப்பம் கிடையாது. சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக முறையிட்டதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில், தற்போது தொழிற்சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்ய ஆட்கள் வந்தபடியே உள்ளனர்.

எனவே கிராம மக்களின் எதிர்ப்பினை பதிவு செய்யும் விதமாக இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், 10 பேர் மட்டுமே சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தாக பொய் அறிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளனர்.

இங்கு தொழிற்சாலை அமைய உள்ள இடத்துக்கு அருகிலேயே நீர்நிலை, மருத்துவமனை, ரயில் நிலையம், பள்ளிக் கூடம். 270 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நீரேற்று நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. ஆகையால் இத்திட்டத்தை ஊருக்கு வெளியே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் பாதாள சாக்கடை திட்டம் - 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.