சாத்தான்குளம் தந்தை - மகன் சித்தரவதை கொலை விவகாரத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் முருகன், பிணை கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர் முருகன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலமாக வாதிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முருகனின் பிணை மனு இதுவரை மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இ-பாஸ் ரத்து வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!