தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கள்ளியடைப்பு. இந்த ஊரைச் சேர்ந்தவர் கருப்பன்.
இவருக்கு 70 ஆடுகள் சொந்தமாக உள்ளன. நேற்றிரவு (அக்.1) மேய்ச்சல் முடிந்தவுடன் ஆடுகளை தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டிவிட்டு சென்றுள்ளார்.
காலையில் பார்த்தபோது அதில் 35 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றது தெரியவந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கருப்பன் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்தப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.